CINEMA
எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர்தான் காட்பாதர்…. துருவா சர்ஜா யாரை சொன்னார் தெரியுமா…??
நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதியிருக்கின்ற படம் தான் மார்ட்டின். இந்த படத்தின் ஹீரோவாக பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்துள்ளார். இவர் அர்ஜுனனின் சகோதரி மகன். ஹீரோயின் ஆக அன்வேஷி ஜெயின் நடித்துள்ளார். முற்றிலும் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பல மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.
அதாவது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 13 மொழிகளில் வருகிற அக்டோபர் 11ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்திய தேசப்பற்றை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் இந்த படத்தின் ஹீரோ துருவா சர்ஜா பேசுகையில், என்னுடைய மாமா அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அவர் சம்மதம் சொன்னால் உடனே நடிக்க தயார். எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையில் அவர்தான் காட்பாதர் என்று கூறியுள்ளார்.