விருந்து கொடுத்த கென் கருணாஸ்…பெண் விருந்தினர்கள் முன்னிலையில் இப்படியா?…இது நாகரிகமா?…எக்ஸ் (X) தளத்தில் போட்ட அந்த ஒரு வாசகம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! – cinefeeds
Connect with us

CINEMA

விருந்து கொடுத்த கென் கருணாஸ்…பெண் விருந்தினர்கள் முன்னிலையில் இப்படியா?…இது நாகரிகமா?…எக்ஸ் (X) தளத்தில் போட்ட அந்த ஒரு வாசகம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் கென் கருணாஸ். அண்மையில் இவரது நடிப்பில் டீன் ஏஜ் பருவ காதல் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு வெளியான ‘யூத்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கென் கருணாஸ் தனது சினிமா நண்பர்களை வீட்டிற்கு அழைத்து ஒரு சிறப்பான விருந்து கொடுத்துள்ளார்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது தந்தையும், நடிகருமான கருணாஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து, “பகுத்துண்டு பல்லுயிர் Ken & gang” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த ஒரே ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் மேசையின் மீது விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டிருந்ததைக் கவனித்த இணையவாசி ஒருவர், “அனைத்து வகை அசைவ உணவுகளும் மேசையில் இருக்கும்போது ‘பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பொருள்படும் ‘பகுத்துண்டு பல்லுயிர்’ வாசகம் இதற்குப் பொருத்தமானதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதற்கிடையே, அந்த வாசகத்தின் உண்மையான பொருள் இல்லாதபட்டவர்களோடு பகிர்ந்து உண்பதே தவிர, வீட்டிற்குள் அமர்ந்து கறிக்கஞ்சி சாப்பிடுவது அல்ல என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்துள்ளனர். மேலும், அந்தப் புகைப்படத்தில் கருணாஸ் சட்டை அணியாமல் அமர்ந்திருந்ததைக் குறிப்பிட்டு, பெண் விருந்தினர்கள் முன்னிலையில் இப்படி அமர்ந்திருப்பது நாகரிகமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், இது அவர்களின் தனிப்பட்ட குடும்ப விருந்து என்பதால் தேவையற்ற விமர்சனங்கள் தேவையில்லை என கென் கருணாஸின் குடும்பத்திற்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சாதாரண சகஜமான விருந்து புகைப்படம், தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in