CINEMA
அனாதையா சாகுவ…! உனக்கு யாரும் வரமாட்டாங்க… மனைவி, பிள்ளை இல்லாம கஷ்டப்படுவ…! குருநாதர் பாக்யராஜ் இறுதிச்சடங்கில் பார்த்திபனுக்கு வந்த அதிர்ச்சி சாப மெசேஜ்..!!!
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகினரைக் கடுமையான துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அவரிடமிருந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட நடிகர் பார்த்திபன், தனது குருநாதரின் மறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டார். துயர செய்தி அறிந்த நொடியிலிருந்து இறுதிச் சடங்குகள் முடியும் வரை, மருத்துவமனையிலிருந்து உடலைக் கொண்டு வருவது, பிரபலங்களை வரவேற்பது மற்றும் சாந்தனுவுக்குத் துணையாக இருப்பது என ஒரு குடும்ப உறுப்பினர் போலவே அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்திபன் முன்னின்று கவனித்துக் கொண்டார்.
இறுதி ஊர்வலத்தின் போது நடிகர் சரத்குமாருடன் இணைந்து இறுதி வாகனத்தை வழியனுப்பிய பார்த்திபன், தனது குருவுக்கு வழக்கமான மலர் அஞ்சலியைத் தாண்டி ஒரு தனித்துவமான மரியாதையைச் செலுத்த விரும்பினார். இதற்காக நள்ளிரவில் ஒரு ஆர்ட் டைரக்டரைத் தொடர்புகொண்டு, “அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ்” என்ற அவரது கையெழுத்து வடிவ அஞ்சலி அட்டையைத் தயாரிக்கச் செய்தார். இந்த அஞ்சலி அட்டை, இறுதி அஞ்சலி மற்றும் தகனம் செய்யச் செல்லும் வரை பாக்யராஜின் உடலுடனேயே இருந்தது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு வந்த ஒரு அதிர்ச்சிகரமான குறுஞ்செய்தி குறித்து பார்த்திபன் பகிர்ந்துள்ளார். பாக்யராஜ் குழுவில் முன்பு பணியாற்றிய ஒருவர் பார்த்திபனுக்கு அனுப்பிய அந்த மெசேஜில், “நீதான் பாக்யராஜை வளர்த்த மாதிரி எல்லா வேலையையும் செய்கிறாய், யாரையும் மதிக்க மாட்டாய்; இதனால்தான் நீ மனைவி, பிள்ளை இல்லாமல் கஷ்டப்படுகிறாய், இன்னும் கொஞ்ச நாளில் நீயும் சாகும்போது உனக்கு யாரும் வரமாட்டார்கள்” என்று கடுமையான சாப வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்காத பார்த்திபன், இதனை சாந்தனுவிடம் மட்டும் காட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
