FLASH: பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!! – cinefeeds
Connect with us

CINEMA

FLASH: பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!!

Published

on

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானதை அடுத்து, அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்து வாடும் நடிகர் சதீஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வருகை தந்து தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம், நடிகர் சதீஷின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த அவரது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், சதீஷிற்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in