“விஜய் கூட நடிச்சேன்… முதல்வர் கூட என் பையன்.. இதைவிட வேற என்ன வேணும்!”.. வைரலாகும் நடிகர் சின்னி ஜெயந்தின் ஸ்பீச்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“விஜய் கூட நடிச்சேன்… முதல்வர் கூட என் பையன்.. இதைவிட வேற என்ன வேணும்!”.. வைரலாகும் நடிகர் சின்னி ஜெயந்தின் ஸ்பீச்..!!

Published

on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாசிரியர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களில் மிளிர்ந்தவர் சின்னி ஜெயந்த். 80, 90-களில் கல்லூரி மாணவர் கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்த இவர், தனது மகன்களைத் திரைத்துறை கவர்ச்சியில் வீழ விடாமல், கல்வி வழியில் திருப்பி வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளார். இவரது மூத்த மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராகப் பணியாற்றியவர். தற்போது அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சின்னி ஜெயந்த், “25 வருடங்களுக்கு முன்பு விஜய் சாருடன் ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் நடித்தேன். அந்த மாண்புமிகு மாணவன் இப்போது மாண்புமிகு முதலமைச்சராக மாறியிருக்கிறார். நான் விஜய் சாருடன் வேலை செய்தேன், இப்போது எனது மகன் முதலமைச்சருடன் வேலை செய்கிறார். எனது மகன் பொதுத்துறை துணைச் செயலாளராக (Deputy Secretary to government & public department) முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே பணியாற்றுகிறார். இதைவிட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன பெருமை வேண்டும்” என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in