CINEMA
நடிகைக்கே இந்த நிலைமையா?.. பிரபல சீரியல் நடிகைக்கு நிர்வாண போட்டோக்கள் அனுப்பிய ஆசாமி.. சற்று முன் பரபரப்பு புகார்..!!
போலி சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கி, தனக்கு அவதூறான மெசேஜ்களையும் ஆபாசப் படங்களையும் அனுப்பித் தொடர் தொல்லை கொடுத்து வருவதாகக் கன்னடத் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி அதிர்ச்சி குற்றம்சாட்டியுள்ளார். இந்த அத்துமீறலின் பின்னணியில் தனக்குத் தெரிந்த மன்னத் நகுல் என்பவரே இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுகுறித்து காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாகக் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளான ரம்யா, ருக்மிணி வசந்த் ஆகியோரும் இணையவழியில் இதுபோன்ற ஆபாசச் செய்திகள் மற்றும் மன உளைச்சலைத் தரும் தொந்தரவுகளுக்கு ஆளானதாக வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஐஸ்வர்யா சிந்தோகிக்கு நடந்துள்ள இந்தச் சம்பவம், பெண் கலைஞர்களின் இணைய பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.
