LATEST NEWS
என்னது..! ஒரே நாளில் 16 சூரிய உதயமா…! விண்வெளியில்அனில் மேனனின்… சிலிர்க்க வைக்கும் அனுபவம்…!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், ஜூலை 14 அன்று சோயுஸ் எம்.எஸ்-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளார். பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த விண்வெளி நிலையத்தில், அவர் 8 மாத கால அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
சர்வதேச விண்வெளி நிலையம் மணிக்கு 28,000 கிலோமீட்டர் அதிவேகத்தில் பயணிப்பதால், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுமையாகச் சுற்றி வருகிறது. இதனால் 24 மணி நேரத்திற்குள் விண்வெளி நிலையம் சுமார் 16 சுற்றுகளை முடிக்கும்போது, அங்குள்ள அனில் மேனன் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனத்தையும் காண்கின்றனர்.
மருத்துவரான அனில் மேனன், நீண்டகால விண்வெளிப் பயணம் மனித உடலில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள சந்திரன், செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு உதவும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
