LATEST NEWS
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!.. அண்ணன் விஜய்க்கு டஃப் ஃபைட் கொடுக்க ரெடியாகும் லாரன்ஸ்.. தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்..!!
நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகத் தான் அரசியலில் நுழையலாமா வேண்டாமா என்பது குறித்துப் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு கோரிய அவர், மக்களின் ஆதரவைத் தொடர்ந்து தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தனது புதிய கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் கொடியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வரும் ராகவா லாரன்ஸ், தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கிச் சேவை செய்ய முடிவெடுத்துள்ள செய்தி, அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
