CINEMA
விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஓப்பனாக பேசிய ரகசியம்…! வதந்திகளை சுக்குநூறாக்கிய ஜேசன் சஞ்சயின் வைரல் வீடியோ..!!!
தமிழக முதல்வர் மற்றும் நடிகரான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சிறுவனுடன் பேசும் நேர்காணல் போன்ற ஒரு புதிய காணொளியில் தனது சிறுவயது நினைவுகளைச் சிரிப்புடன் பகிர்ந்துள்ளார். அதில், தான் சிறிய வயதாக இருக்கும்போது ஒரு நடிகர் தன்னை “கடத்திச் சென்றது போல” விளையாட்டாக நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நகைச்சுவையுடன் விவரித்துள்ளார். தந்தையுடன் சிறுவயதில் அதிக அளவில் பயணித்த நினைவுகள் குறித்தும் அவர் இந்தக் காணொளியில் பேசியுள்ளார்.
கடந்த காலங்களில் விஜய் – சங்கீதா தம்பதியரின் விவாகரத்து வதந்திகள் பரவியபோது, ஜேசன் சஞ்சய் தனது சமூக வலைதளங்களில் தந்தையைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் என்றும், தனது பெயரின் பின்னால் இருந்த தந்தையின் இனிஷியலான வி என்ற எழுத்தை நீக்கிவிட்டு தாயின் இனிஷியலான எஸ் என்பதைச் சேர்த்துக்கொண்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவின. மேலும், அவர் தாயுடன் மட்டுமே வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அவர் தந்தையைப் பற்றி மிகுந்த பாசத்துடனும், அலாதி அக்கறையுடனும் பேசியுள்ளார்.
சஞ்சய் தனது தந்தையைப் பற்றிப் பேசியுள்ள விதம், அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதப் பிரிவும் இல்லை என்பதையும், அவர்களின் பிணைப்பு வலுவாக இருப்பதையும் காட்டுவதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சிக்மா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
