CINEMA
திருமணத்திற்குத் தன்னை அழைக்கவில்லை…! அவங்க லெவல் ரொம்ப பெருசாகிடுச்சு போல…! குஷ்பு மகள் திருமண விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை..!!
பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி மற்றும் 80, 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், ஷ்ரவன் ஸ்ரீனிவாசனுக்கும் கடந்த ஜூன் 25-ம் தேதி கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், இந்தத் திருமணத்திற்குத் தன்னை அழைக்கவில்லை என்று மூத்த நடிகர் ராதா ரவி யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குஷ்பு அல்லது சுந்தர்.சி இருவரில் யாராவது ஒருவர் கண்டிப்பாகத் தன்னைத் திருமணத்திற்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் கூப்பிடாததால் தான் திருமணத்திற்குச் செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “அவர்களின் லெவல் பெரிதாகிவிட்டதா எனத் தெரியவில்லை, ஒருவேளை தேர்ந்தெடுத்து சிலரை மட்டும் அழைத்திருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக அவர்களுக்குத் தான் செய்த உதவிகளை நினைவுகூர்ந்த ராதா ரவி, நடந்து முடிந்த தேர்தலில் சுந்தர்.சி மதுரையில் போட்டியிட்டபோது, தான் அவரை வாழ்த்தி அனுப்பி, அவர்களுக்குத் தேர்தல் நேரத்தில் ஆதரவாக உதவியதாக இருந்தேன் என்று தெரிவித்தார். அப்போது தமக்குத் தேவை இருந்ததால் பயன்படுத்திக் கொண்டவர்கள், தற்போது தேவை இல்லாததால் தன்னைத் திருமணத்திற்கு அழைக்காமல் தவிர்த்துவிட்டார்கள் என்று அவர் அந்தப் பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
