CINEMA
“டைம் மெஷின்ல போயிட்டாரா பாஸ்?”.. சத்யராஜின் பேச்சால் அலறும் நெட்டிசன்கள்… இணையத்தை பிளக்கும் ட்ரோல்ஸ்..!!
சமீபத்திய பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மூத்த நடிகர் சத்யராஜ், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே எனக்குத் தெரியாது, மா.சுப்பிரமணியன் மட்டும்தான் எனக்கு எப்போதும் அமைச்சர் என்று தெரிவித்த கருத்து, இணையதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதுடன் நகைச்சுவையான மீம்ஸ்களுக்கும் வழிகோலியுள்ளது. தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய ஆட்சியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இப் பேச்சு அமைந்திருப்பதாகக் கூறி, இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “எனக்கு தற்போதைய பிரதமர் யாரென்றெல்லாம் தெரியாது, மன்மோகன் சிங்தான் என்றும் பிரதமர்; புதிய 500 ரூபாய் நோட்டுகளை விட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைத்தான் நான் ஏற்றுக்கொள்வேன்” என அவர் கூறுவது போல விதவிதமான கேலிச் சித்திரங்களையும் மீம்களையும் உருவாக்கி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மீம்ஸ் கிரியேட்டர்கள், “கடந்த மே மாத தேர்தல் முடிவுகளிலிருந்து நடிகர் சத்யராஜ் ‘செலக்டிவ் அம்னீஷியா’ என்ற நினைவாற்றல் குறைபாடு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல” என்று கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். அரசியல் எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர் பழைய நினைவுகளிலேயே மூழ்கியிருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வரும் இந்தச் விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங் தலைப்பாக மாறியுள்ளது.
