LATEST NEWS
“டிரம்பை எங்கே கொல்வது?”.. ஈரானின் பகிரங்க மிரட்டல் வீடியோ… உறைந்து போன அமெரிக்கா.. உச்சகட்ட பதற்றத்தில் உலகம்..!!
பிப்ரவரி 28-இல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய கூட்டுத் தாக்குதலின் ஆரம்ப நாளிலேயே, ஈரானிய உயர்மட்டத் தலைவர் அலி கமேனியும் அவருடைய குடும்பத்தாரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் உயிரைப் பறிப்போம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ஈரானிய புரட்சிகரக் காவல்படையின் ஆதரவு பெற்ற ‘ஃபார்ஸ்’ செய்தி அமைப்பு, “டிரம்பை வீழ்த்துவது எங்கே?” எனும் பொருள்படும் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது. டொனால்ட் டிரம்பின் கார் அணிவகுப்பு செல்லும் வழிகளையும், புளோரிடாவிலுள்ள அவருடைய சொகுசு பங்களாவுக்கு அருகிலுள்ள பாலத்தையும் இலக்குகளாகக் சுட்டிக்காட்டுகிறது.
இந்த காணொளி, எக்ஸ் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் தீவிர பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, டிரம்பைக் கோல்ஃப் மைதானத்தில் தாக்குவது போன்ற அனிமேஷன் வீடியோக்களும், அவரைத் தாக்கத் தீட்டப்பட்ட சதி தொடர்பான ரகசிய கேமரா வீடியோக்களும் வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இந்த தொடர் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு அதிபர் டிரம்புக்கான பாதுகாப்பை அதிரடியாக அதிகரித்துள்ளது. அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், “ஈரானின் படுகொலைக்கான பட்டியலில் நான் முதலிடத்தில் உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்ப் பதற்றம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
