CINEMA
பிக்பாஸிலிருந்து விலகும் நடிகர் கமலஹாசன்….. அவரே போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு…. ரசிகர்கள் ஷாக்…!!
பிக் பாஸ் சீசனிலிருந்து விலகுவதாக கமலஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளியை எடுக்கிறேன் என்பதை மிகுந்த வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சினிமா கமிட்மென்ட் காரணமாக பிக் பாஸில் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. கடந்த சீசன்கள் மூலமாக உங்கள் இல்லங்களில் உங்களைச் சென்றடையும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
உங்கள் அன்பையும் பாசத்தையும் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்றென்றும் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். தனிப்பட்ட முறையில் உங்கள் புரவலராக இருந்து, எனது கற்றலை நான் நேர்மையாக பகிர்ந்து கொண்டதில், இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன், உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி என்றுபதிவிட்டுள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
View this post on Instagram