துரோகம் செஞ்சிட்டாரு விக்ரம்…. வளர்த்துவிட்டவரையே மறந்துட்டாரே…. கொந்தளித்த ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

துரோகம் செஞ்சிட்டாரு விக்ரம்…. வளர்த்துவிட்டவரையே மறந்துட்டாரே…. கொந்தளித்த ரசிகர்கள்…!!

Published

on

நடிகர் விக்ரம் சினிமாவில் கஷ்டப்பட்டு போராடி மேலே வந்தவர். ஆரம்பத்தில் அப்பாஸ், வினித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் மலையாள படத்தில் ஹீரோக்களின் தம்பியாக பல படங்களில் நடித்தார். அப்போதுதான் இயக்குனர் பாலாவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஏற்கனவே முரளி விக்னேஷ் என்று பலரிடம் சென்று அவர் நடிக்காமல் போன கதையான சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு விக்ரமிற்கு கிடைத்தது. இந்த படத்தை பாலா விக்ரமை வைத்து சிறப்பாக முடித்தார். இந்த படத்தில் சியான் விக்ரமாக மாறினார் விக்ரம்.

அதன்பிறகு தூள், ஜெமினி, சாமி என்ற பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு பாலா இயக்கத்தில் நடிக்கவில்லை. இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Advertisement

இந்த விழாவில் பேசிய விக்ரம் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்கள் பெயரை சொல்லும் பொழுது பாலாவின் பெயரை சொல்லவில்லை.  விக்ரமிற்கு சியான் என்ற பெயர் வர காரணமே பாலா தான். விக்ரம் என்றால் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது சேது, பிதாமகன் போன்ற படங்கள்தான். அப்படி இருக்கும் பொழுது விக்ரம் பாலாவின் பெயரை சொல்லாமல் விட்டது குரு துரோகம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement