CINEMA
அந்த வெறி இல்லனா நான் உங்க முன்னாடி இல்ல…. விக்ரம் பேச்சை கேட்டு அரங்கமே அதிர்ந்த தருணம்…!!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ள படம் தங்கலான். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் தங்கலான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது .அதில் விக்ரம் பேசிய போது, தன்னுடைய வாழ்க்கை நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதாவது, எனக்கு நடிப்பின் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சின்னதோ பெரியதோ ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் கல்லூரி படிக்கும் பொழுது விபத்தில் சிக்கிக்கொண்டேன். என்னுடைய கால் உடைந்தது . அதன் பிறகு மூன்று வருடங்கள் என்னுடைய வாழ்க்கையை மருத்துவமனையில் கடத்தினேன். 23 அறுவை சிகிச்சை நடந்தது.
மருத்துவர்கள் எழுந்து நடக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையும், கனவும் லட்சியம் மட்டுமே இருந்தது. இந்தப் போராட்டத்தில் 10 வருடங்கள் கழிந்தது .நடக்கவே முடியாது என்று சொன்னவர்கள் முன்னால் என்னால் நடக்க முடிந்தது. அன்று நான் விட்டிருந்தால் இன்று உங்கள் முன் நான் ஒரு நடிகராக நின்று பேசி இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்துள்ளது.