CINEMA
கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிய வனிதா…. அதிர்ந்துபோன சமுத்திரக்கனி… பின்னர் என்ன நடந்ததுதெரியுமா..??
தியாகராஜன் இயக்கத்தில் உருவான படம் தான் அந்தகன். அந்த படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார். சிம்ரன், பிரியா ஆனந்த், மனோபாலா, சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உட்பட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற ஒன்பதாம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சமுத்திரக்கனி பேசுகையில், நான் தியாகராஜனின் தீவிர ரசிகன். படப்பிடிப்பில் ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை சரமாரியாக திட்டினார். இதனால் தாங்க முடியாமல் இருந்த நான் தியாகராஜனிடம் சென்று வனிதா ஏன் என்னை இப்படி திட்டுகிறார் என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்றேன் . அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படி எல்லாம் பேசவேண்டுமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என்று கூறியதாக பேசியுள்ளார்.