CINEMA
“சுயமரியாதை முக்கியம்” CWC நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்…. VJ மணிமேகலை திடீர் அறிவிப்பு….!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் மணிமேகலை. இவர் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் திடீரென்று அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு, குக்காக இருக்கும் மற்றொரு தொகுப்பாளர், தன்னுடைய பணியில் ஆதிக்கம் செலுத்துகிறார்.இந்த சீசன் முழுவதும் பெண் ஆங்கரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பணம், புகழை விட சுயமரியாதையே முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் பிரியங்காவை தான் மறைமுகமாக சொல்வதாக கூறப்படுகிறது.