CINEMA
இந்தியன்-2 ஓடாததற்கு நான் காரணமா…? மனசு கஷ்டமா இருக்கு…. பிரியா பவானி சங்கர் வேதனை…!!
சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ். ஜே சூர்யா பலரும் நடித்து வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படம் சரியாக ஓடாததற்கு பிரியா பவானி சங்கர் நடித்தது தான் காரணம் என்றும், அவர் அவருடைய துரதிஷ்டம் தான் காரணம் என்றும் இணையவாசிகள் குறைசொல்லி வந்தார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், இந்தியன் 2 திரைப்படம் நன்றாக ஓடாததற்கு காரணம் முழுக்க முழுக்க என்னை காரணம் சொல்வது நியாயம் இல்லை .துரதிஷ்டசாலி என்று கூறும் பொழுது மிகவும் மன கஷ்டத்திற்கு ஆளானேன். இந்தியன்- 2 திரைப்படத்தில் நடித்ததற்கு நான் எந்த விதத்திலும் வருத்தப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.