CINEMA
விஜய் இப்படி பண்ணுவாருனு நினைச்சிக்கூட பாக்கல…. என்னால ஏத்துக்கவே முடியல…. இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தில் இருப்பவர்தான் தளபதி விஜய். பல போராட்டங்களையும், அவமானங்களையும் கடந்து தற்போது திரையுலகே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். கடைசியாக இவர் நடித்த லியோ படத்திற்காக 175 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். தற்போது கோட் படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்கி உள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய் நடிப்பிலிருந்து விலக முடிவு எடுத்தார் . எனவே தான் தளபதி 69 படத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலக இருக்கிறார். இவரின் இந்த முடிவானது ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரை பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலானவர்கள் விஜய் நடிப்பில் இருந்து விலகக் கூடாது என்று சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் கூட விஜய் முடிவை குறித்து சமீபத்தில் பேசி உள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் மற்றும் உதயநிதி வைத்து மாமனார் படங்களை இயக்கினார். தற்போது வாழை படத்தை இயக்கியுள்ளார். சிறுவயதிலிருந்தே மாரி செல்வராஜ் விஜயின் தீவிர ரசிகராம். விஜய் ரசிகர் மன்றம் எல்லாம் நடத்தி வந்துள்ளார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் விஜய் நடிப்பிலிருந்து விலகுவதாக வந்த அறிவிப்பை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விஜய் நடிப்பில் இருந்து விலகுவார் என்று தான் நினைக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.