CINEMA
ஞாயிற்றுக்கிழமை மட்டும் சிம்பு அந்த விஷயத்தில் ஜாலியாக இருப்பார்…. ஓப்பனாக உண்மையை பேசிய பிரபலம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு காதல் அழிவதில்லை உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் நடித்து பிரபலமானார். சிம்புவை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்லலாம். இதற்கிடையில் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் மாநாடு படத்தின் மூலமாக உடல் எடை குறைத்து பழைய சிம்புவாக மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
அதன் பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது கமலுடன் இணைந்து தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஒளிப்பதிவாளர் கோபிநாத், சிம்புவால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை.
சரியான நேரத்தில் வந்து முழு ஒத்துழைப்பு கொடுப்பார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் கிரிக்கெட் விளையாடுவார். அவருக்காக உதவி கேமராமேன் உதவி இயக்குனர்கள் போன்றவர்களை வைத்து ஒரு டீமை சிம்புவிற்கு கொடுப்போம். அன்று மட்டும் ஒரு நாள் முழுக்க ஜாலியாக கிரிக்கெட் விளையாடுவார் சிம்பு. மற்றபடி அவரால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.