CINEMA
நடிகர் ரஜினியுடன் படம்…? இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த முக்கிய அப்டேட்…!!
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் வாழை. இந்த படத்திற்கு சந்தஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.
படம் வெளியிட்டில் சற்று தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ், ரஜினி சார் கூட படம் பண்ண பேசிகிட்டு இருக்கோம் என்று பேசியுள்ளார்.