CINEMA
தமிழன் கொடிப் பறக்குது…. தலைவன் யுகம் பொறக்குது…. வைரலாகும் தவெக கட்சிப் பாடல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. இதனையடுத்து தவெகவின் கட்சி பாடலும் ஒளிபரப்பட்டது. தமிழன் கொடிப் பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.
பாடலில் முதலில் போர்க்களத்தில் யானையில் இருந்து இறங்கி வருவது போல அந்தப் பாடல் காட்சிகள் உள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விலங்குகளான ஜல்லிக்கட்டு காளை, யானை ஆகியவை அதில் இடம்பெற்றிருக்கின்றன. சங்கக்காலத்தில் போர் நடப்பது போலவும் காட்சிகள் உள்ளன.