CINEMA
“புதுப் படங்களுக்கு நோ…” திடீரென சினிமாவுக்கு பிரேக் கொடுக்கிறாரா பிரியா பவானி சங்கர்…? இதுதான் காரணமா…?
செய்தி வாசிப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரை வழியாக வெள்ளித்திரையில் முன்னணி இடத்தைப் பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், கார்த்தி, தனுஷ், எஸ்.ஜே.சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். திரையுலகிற்கு வந்த காலத்திலிருந்தே தனது நீண்ட காலக் காதல் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த பிரியா, அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.
தற்போது பிரியா பவானி சங்கர் இந்த ஆண்டே திருமண பந்தத்தில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பதால், அவர் புதிய திரைப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் கைவசம் ‘மரகத நாணயம் 2’ மற்றும் ‘டிமாண்டி காலனி 3’ ஆகிய படங்கள் மட்டுமே உள்ளன. விரைவில் தனது திருமணத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
