CINEMA
அம்மாவை மிஞ்சுவாரா பிரியங்கா…? டாப் ஸ்டார் பிரசாந்துடன் இணையும் தேவயானியின் செல்ல மகள்… சம்பளம் எவ்வளவு தெரியுமா…?
நடிகர் பிரசாந்தின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ‘ரஞ்ஜன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த நடிகர் தியாகராஜன் இயக்கும் இத்திரைப்படத்தின் மூலம், பிரபல நடிகை தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த தேவயானி, தற்போது தனது மகளை பிரசாந்த் மூலமாகவே திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘கோர்ட்’ திரைப்படத்தின் தமிழ் மறுவாக்கமாக உருவாகும் இதில், பிரசாந்த் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பிரியங்கா ராஜகுமாரன் மற்றும் ஹரி கதிரேசன் ஆகிய இருவருக்கும் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் இத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்ற பிறகு, கிடைக்கும் லாபத்தில் அவர்களுக்குப் பங்கு தரப்படும் எனத் தயாரிப்புத் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவயானியின் மூத்த மகள் இனியா ஏற்கனவே பாடும் திறமையால் கவனம் பெற்ற நிலையில், தற்போது இளைய மகள் பிரியங்கா நடிப்புத் துறையில் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
