CINEMA
ஆதவன் படத்தில் சிறுவயது தோற்றத்தில் சூர்யா…. என்ன செஞ்சோம் தெரியுமா…? உண்மையை சொன்ன கே.எஸ் ரவிக்குமார்…!!
நடிகர் சூர்யா முதல் நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவர் நடித்த ஆதவன் படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் சிறுவனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார். அதாவது ஆதவன் படத்தில் சூர்யாவே சிறுவயது கதாபாத்திரமாக நடித்தால் எவ்வாறு இருக்கும் என்று நான் நினைத்தேன்.
இளம் வயதுக்கான சூர்யா மற்றும் ஒரு சிறுவனை நடிக்க வைத்தேன். படப்பிடிப்பின் போது அவர்களுக்கு பின்னால் ஒரு கிரீன் மேட் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அந்த சிறுவனின் உடலில் சூர்யாவின் முகத்தை மட்டும் கச்சிதமாக பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மட்டும் 28 லட்சம் செலவானது. பின்னர் சூர்யா டப்பிங் பேச வந்த போது சிறு வயது தோற்றத்தை பார்த்து ஆச்சரியமடைந்தார் என்று கூறியுள்ளார்.