பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க.. ரம்யா கிருஷ்ணன் எடுத்த அந்த முடிவு… 22 வருடம் கழித்து ரகசியத்தை உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!!” – cinefeeds
Connect with us

CINEMA

பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க.. ரம்யா கிருஷ்ணன் எடுத்த அந்த முடிவு… 22 வருடம் கழித்து ரகசியத்தை உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!!”

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். கதாநாயகி, வில்லி, அம்மா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் முத்திரை பதிக்கும் இவருடைய நடிப்பில் ‘படையப்பா’, ‘பாகுபலி’ போன்ற படங்கள் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றன. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே கதாபாத்திரங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் வல்லவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பஞ்சதந்திரம்’ திரைப்படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாகும். இதில் வரும் ‘மேகி’ கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ளார். மேகி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நக்மா, ரம்பா எனப் பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் தான் இதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் உறுதியாக இருந்துள்ளார்.

Advertisement

இந்த கதாபாத்திரத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ரம்யா கிருஷ்ணன் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளார். அந்த ஒரு மாதத்தில் மிகவும் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு, தனது உடல் எடையைக் குறைத்து முற்றிலும் புதிய தோற்றத்தில் ‘மேகி’யாகத் திரையில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கதாபாத்திரத்தின் தன்மைக்காக அவர் காட்டிய இந்த அர்ப்பணிப்பு தான், இன்று வரை அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in