CINEMA
“ஆவேஷம்” ரீமேக் படத்தில் ரங்கா அண்ணாவாக பாலைய்யாவா…? செம குஷியில் ரசிகர்கள்…!!

ரோமஞ்சம் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் பகத் பாஸில், மன்சூர் அலிகான் சஜின் கோபு, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் ஆவேஷம். இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சனம் ரீதியாகவும் சக்கை போடு போட்டு போட்டது . இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகப் பெரியளவில் ஹிட் அடித்தது.
குறிப்பாக டேப்சி குரலில் “இலுமினாட்டி” என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த படத்தில் பகத் பாஸில் ரங்கன் சேட்டாவாக அதாவது அண்ணனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் ரங்கன் சேட்டா கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பாலைய்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவர்களுடைய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.