CINEMA
கேம் சேஞ்சர் பட 2-ஆவது சிங்கிளில்…. 7 அதிசயத்தை ஒன்றாக வைத்த ஷங்கர்…. சுவாரஸ்ய தகவல்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரின் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரொமோ நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த இரண்டாவது சிங்கிளில் ஏழு மாநிலங்களுக்கான பிரத்தியேக இசையை ஷங்கர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.