CINEMA
“அரவிந்த் சாமி வீட்டில் அடுத்த ஹீரோ ரெடி” தலைக்கு மேல் வளர்ந்த மகனுடன் அரவிந்த்சாமி…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார்.இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், சமீபக் காலமாகவே சினிமா பிரபலங்களின் வாரிசு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், நடிகர் அரவிந்த்சாமியின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ “அரவிந்த் சாமி வீட்டில் அடுத்த நாயகன் ரெடி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.