CINEMA
இப்படியொரு மனுஷனா…? என்னுடைய நோக்கம் இது மட்டும் தான்…. அரவிந்த்சாமி நச் பேச்சு…!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார்.இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம் மெய்யழகன். இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய அரவிந்த் சாமி, நன்றாக நடிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். வேறு யாருக்கும் நான் போட்டி இல்லை. மேலும், நான் எந்த ரேஸிலும் கிடையாது. எனது நடிப்பை மக்கள் கொண்டாடினாலே போதும் என்றார்.