CINEMA
ரசிகர் மன்றம் எதுக்கு..? ஊரான் பிள்ளைக்கு நான் அட்வைஸ் பண்ண முடியுமா..? நடிகர் அரவிந்த்சாமி நச்….!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார்.இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இடையில் சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக புதிய அவதாரம் எடுத்து மாஸ் என்ட்ரி கொடுத்தார்.அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது இவரின் நடிப்பில் நரகாசுரன், கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அரவிந்த்சாமி, எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப்போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர் மன்றங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால், நான் அதை ஏற்க மாட்டேன், அப்படி இருக்கும்போது என் மகனுக்கு ஒரு அட்வைஸ், ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸ்-ஐ என்னால் எப்படித் தர முடியும்? என கூறினார்.