CINEMA
கடவுள் நல்லவரா தானே இருப்பாரு…? ஏன் மூட நம்பிக்கையை பரப்புறீங்க…? நடிகர் அரவிந்த்சாமி நச்…!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார்.இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு மூட நம்பிக்கையை சொல்லி தராதீங்க என்று அரவிந்த்சாமி கூறினார். இதுகுறித்து கூறுகையில், “கோயிலுக்கு போய் கடவுளை கும்பிடலைன்னா உனக்கு கெட்டது நடக்கும்னு குழந்தைகளை பயமுறுத்துறாங்க. பரீட்சைக்கு முன் பிள்ளையார் சுழி போடலைனா fail ஆயிடுவேன்னு சொல்றாங்க. கடவுள்னு ஒருத்தர் இருந்தால் நல்லவராகதானே இருப்பாரு. அப்போ ஏன் அவர் பெயரை பயன்படுத்தி, மூட நம்பிக்கையை பரப்புறீங்க என்று பேசியுள்ளார்.