CINEMA
அந்த தாக்கத்திலிருந்து இன்னும் வெளியே வரமுடியவில்லை…. இயக்குநர் ஷங்கர் உருக்கம்…!!
இயக்குனர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. மாரி செல்வராஜின் சிறுவயது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை அழகாக கூறியிருக்கிறார். வாழை படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்வதை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற முடிகிறது.
படம் பார்த்தவர்களுடைய கருத்தும் அதுவாகவே இருக்கிறது. இந்நிலையில், இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், வாழை’ படத்தை பார்ததுவிட்டு கூறுகையில், “படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை. இனி வாழைப்பழத்தை சாப்பிட்டால் கூட இனிக்குமா? எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.