CINEMA
பிரபல தமிழ் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு…. மலையாள நடிகை பரபரப்பு புகார்….!!!
பிரபல தமிழ் நடிகர் ரியாஸ்கான். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்பட்டியான், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ரியாஸ் கான் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து கொடுக்க கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், கேரள அரசு பாதுகாப்பு கொடுத்தால், மலையாள நடிகர் சித்திக்கிற்கு எதிராக புகார் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.