CINEMA
10 வயதில் திரைத்துறையை சேர்ந்த ஒருவரால் பாலியல் தொல்லை…. நடிகை குட்டி பத்மினி குற்றசாட்டு..!!
கேரளத்திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி, 10 வயதில் தனக்கு திரைத்துறை பிரமுகர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதை தனது தாயார் அதை தட்டிக் கேட்டதால் படத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பாலியல் தொல்லை குறித்து தான் எழுதும் புத்தகம் வெளியானதும், பல நடிகர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டிவி நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.