முகத்தில் சோகத்தோடு பானுபிரியா…. அவர் சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனேன்…. வருத்தப்பட்ட பிரபல நடிகை…!! - cinefeeds
Connect with us

CINEMA

முகத்தில் சோகத்தோடு பானுபிரியா…. அவர் சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனேன்…. வருத்தப்பட்ட பிரபல நடிகை…!!

Published

on

1983 ஆம் வருடம் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெல்ல பேசுங்கள். இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பானுப்ரியா. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர். 1998 ஆம் வருடம் ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் சில காரணங்களால் பிரிந்து விட்டார்கள். இவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலங்கள் பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை நடிகை குட்டி பத்மினி கூறி வருகிறார். அப்படி பானுபிரியா குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பானுப்பிரியாவை நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் பார்த்தேன்.

Advertisement

அப்போது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவருடைய முகத்தில் ஒரு கவலை, சோகம் என வெறுமையாக இருந்தார். பானுப்பிரியாவை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. குழந்தைக்காக தான் வாழ்கிறேன் என்று சொன்னதை கேட்டு நான் உடைந்து போனேன் என்று வருத்தமாக பேசி உள்ளார்.

Advertisement