CINEMA
கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி…. நடிகைகளின் நிர்வாண காட்சிகள் பதிவு…. நடிகை ராதிகா பகீர் குற்றசாட்டு…!!
கேரளத்திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ராதிகா, கேரள திரையுலகில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுடைய போனில் பார்த்து ரசிப்பதை தான் நேரில் பார்த்துள்ளதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார். இந்த பயத்தில் தான் ஷூட்டிங்கின் போது, ஹோட்டலில் அறை எடுத்து ஆடை மாற்றுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.