என் மனைவிக்கு விருப்பமே இல்லாம தாலி கட்டினேன்…. முதன்முறையாக திருமண சீக்ரெட் உடைத்த மாரி செல்வராஜ்…!! - cinefeeds
Connect with us

CINEMA

என் மனைவிக்கு விருப்பமே இல்லாம தாலி கட்டினேன்…. முதன்முறையாக திருமண சீக்ரெட் உடைத்த மாரி செல்வராஜ்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.கடந்த 2006 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்த இவர் முதலில் நடிகராக வேண்டும் என்று திட்டமிட்டார்.அதன் பிறகு இயக்குனர் ராமுடன் இணைந்து உதவி இயக்குனராக மூன்று திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.அதாவது கற்றது தமிழ், தங்கமீன்கள் மற்றும் தரமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் 2018 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் குவித்தது. அதன்பின்னர் கர்ணன், மாமன்னன் படங்கள் இயக்கினார். தற்போது வாழை படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் என் மனைவியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். ஆனால் தாலி கட்டுவதில் பெரிதாக எனக்கு உடன்பாடு இல்லை. அம்மா தாலி கட்ட வேண்டும் என்று சொன்னாங்க. விருப்பம் இல்லாமல் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். அதே போல என் மனைவிக்கும் தாலி மீது பெரிதாக விருப்பம் கிடையாது  என்று பேசியுள்ளார்.

Advertisement