CINEMA
ராக் ஸ்டார் அனிருத் – SRH காவ்யா மாறன் காதலுக்கு க்ரீன் சிக்னல்…!வெளிநாட்டில் பிரம்மாண்ட ஏற்பாடு…!திருமண தேதி குறித்து கசிந்த பரபரப்பு தகவல்…!
தென்னிந்தியத் திரையுலகின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வரும் ‘ராக் ஸ்டார்’ அனிருத்திற்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகத் திரையுலகில் நீண்ட நாட்களாகக் கிசுகிசுக்கள் உலா வந்தன. அனிருத் இசையமைப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் அவரது இசைக்காகவே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அண்மையில் வெளியான ‘லவ் இன்சூரன்ஸ் கொம்பனி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், அனிருத்தின் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எலிவேட் செய்ததாகப் பாராட்டப்பட்டது. இத்தகைய பிஸியான சூழலில், அனிருத் பெரிய இடத்துப் பெண்ணான காவ்யா மாறனைக் காதலித்து வருவதாகப் பரவிய தகவல், தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக இவர்களது காதல் மற்றும் திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு அனிருத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “கல்யாணமா? லொள்ளு, சில்லா இருங்க மக்களே, வதந்திகளைப் பரப்பாதீங்க” என்று பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் சற்றே அடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இவர்களின் திருமணம் குறித்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இரு வீட்டாரும் பேசித் திருமணம் செய்யத் தேதி குறித்துவிட்டதாகவும், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் இவர்களது திருமணம் நடைபெறத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் இப்போதே ரகசியமாகத் தொடங்கிவிட்டதாகவும் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, இவர்களது திருமணத்தை இந்தியாவில் நடத்தாமல் ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் மிகவும் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் திருமணத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு திரையுலகினருக்கும் விஐபிக்களுக்கும் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி (Reception) நடத்த இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இருப்பினும், இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்தத் திருமணத் தகவல்கள் குறித்து அனிருத் தரப்பில் இருந்தோ அல்லது மாறன் குடும்பத்தினரிடம் இருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும், அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
