CINEMA
இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்யப் போவது அந்த விவிஐபியின் மகளை தான் – உறுதிப்படுத்திய சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா!
தமிழ் சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் திருமணம் எப்போது என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இடையே காதல் இருப்பதாகவும் வெளிநாடுகளில் அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றித் திரிவதாகவும் தகவல்கள் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் இதுகுறித்து இரண்டு தரப்பிலுமே எந்த விளக்கமும் தரவில்லை.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய உறவினர் மற்றும் சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
