CINEMA
“வாழை” படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு…. படம் பார்க்காதவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…!!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். சமூக வலைதள பக்கத்தில் எங்கு பார்த்தாலும் வாழைப் படத்தின் ரிவ்யூ தான் இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படம் பெரிதாக பேசப்படுகிறது. மேலும் படத்தின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த படமானது அக்டோபர் 11 முதல் Disney+Hotstar இல் வெளியாக உள்ளது.