CINEMA
சும்மா சுத்திட்டு இருந்தேன்…. அப்படி பண்ணுன கதைதான் லப்பர் பந்து… படம் உருவான விதம் குறித்து பேசிய இயக்குனர்…!!
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் தமிழரசன், நான் வேற ஒரு ரொமான்டிக் காமெடி கதையை வச்சுகிட்டுதான் 2 வருஷம் சுத்திக்கிட்டு இருந்தேன். அது பட்ஜெட் ரொம்ப பெருசா இருந்ததால முதல் படமாக என்னால அதைப் பண்ண முடியுமானு தெரில. அதுனால அர்ஜென்ட்டுக்கு பண்ணின கதைதான் ‘லப்பர் பந்து’ என்று பேசியுள்ளார்.