வந்தது சிக்கல்…! “வாழை” படத்தின் கதை என்னுடைய கதை…. உரிமை கோரும் எழுத்தாளர்…!! - cinefeeds
Connect with us

CINEMA

வந்தது சிக்கல்…! “வாழை” படத்தின் கதை என்னுடைய கதை…. உரிமை கோரும் எழுத்தாளர்…!!

Published

on

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். சமூக வலைதள பக்கத்தில் எங்கு பார்த்தாலும் வாழைப் படத்தின் ரிவ்யூ தான் இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படுகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜின் “வாழை” கதை தனது கதை என்று எழுத்தாளர் சோ. தர்மன் உரிமை கோரி உள்ளார்.

Advertisement

ஸ்ரீவைகுண்டத்தில் வாழைத் தார்களை சுமந்த சிறுவர்களை பார்த்து “வாழையடி” என்ற சிறுகதையை எழுதியதாகவும், அந்தக் கதை தான் வாழை என்றும் அவர் கூறியுள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த தர்மன், “சூல்” என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement