CINEMA
மலையாள சினிமாவில் மட்டும் தான் நடக்குதா..? இங்கே அதை விட அதிகம்…. பகீர் கிளப்பிய நடிகை ஷகிலா…!!
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினராக இருந்தார்கள். இந்த கமிட்டிக்கு 600க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
படங்களில் நடிக்க வந்த போது அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் வாக்குமூலம் ஆகவும் தரப்பட்டது. நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிக்கை வெளியானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உட்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய பூகம்பத்தால் மோகன்லால் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடுத்தடுத்த ராஜினாமா செய்தது மட்டுமின்றி நடிகர் சங்கத்தையும் கலைத்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேட்டி சசிகலா பேசுகையில், அவர் மலையாள சினிமாவில் மட்டும் இதுபோன்ற பிரச்சினை நடக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் இதைவிட அதிகமாக நடக்கிறது. அதைவிட தெலுங்கு சினிமாவில் நடக்கிறது. அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய அக்ரீமெண்ட் கூட இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.