TRENDING
தமன்னா தனது காதலருடன் … எடுத்துக்கொண்ட புகைப்படம்… யார் அந்த காதலர் தெரியுமா …?
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா . இதை அடுத்து தமிழ் , தெலுங்கில் நடித்துள்ள நடிகை தமன்னா தற்பொழுது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமன்னா நெட்ஃபிக்ஸ் வெப் சீரிஸ் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ இல் தன்னுடன் நடித்த விஜய் வர்மா என்ற நடிகருடன் டேட்டிங் செய்து வருகிறார் என தகவல் பரவி வந்தது. மேலும் இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இதுதவிர ஆரம்பத்தில் இருவரும் திருமணம் பற்றி ஏதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். விஜய் வர்மாவுடனான தனது காதல் குறித்து பேசிய நடிகை தமன்னா, “நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். வர்மா ஒரு அற்புதமான மனிதர் மற்றும் எனக்கு ஏற்ற சரியான வாழ்க்கை துணையும் ஆவார். மேலும் அவர் பெண்களை மதித்து நடப்பவர் ” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காதலர்களான விஜய் வர்மா மற்றும் தமன்னாவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை behindwoods தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இதனை கண்ட தமன்னாவின் ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது. இந்த ஜோடிகளின் காதல் புகைப்படங்கள் இதோ …,
View this post on Instagram