TRENDING
பிக் பாஸ் வீட்டிலிருந்து… வெளியே வந்த பின்… மக்களிடம் பேசி வீடியோ வெளியிட்ட யுகேந்திரன்…!

விஜய் டிவி பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் இதுவரையில் 6 சீசன் நடந்துள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி 7வது சீசன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என தொடங்கிய இந்த சீசன் இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்த பிக் பாஸ் சீசன் 7 -ல் அக்ஷயா, விக்ரம், வருண், யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, ஜோவிகா, வினுஷா, அனன்யா, பவா செல்லதுரை, மணிச்சந்திரன், பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் முதல் வாரத்தில் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்று வருண் வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்து பவா செல்லதுரை தனது உடல்நிலை காரணம் காட்டி இதிலிருந்து தானாகவே வெளியேறினார்.
பின்னர் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களே அதிர்ச்சியாகும் வகையில் வருண் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இதனை அடுத்து கடந்த வாரம் நடந்த டபுள் eviction- ல் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த யுகேந்திரன் தற்பொழுது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி . love you all என கூறி, சங்கமம் படத்தில் உள்ள ஒரு பாடலை பாடி தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் இந்த பாடலை சமர்ப்பித்து உள்ளார். இது தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆக்கி வருகிறது. இந்த விடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..,
View this post on Instagram