சாட்டை படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்த… குணச்சித்திர நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம் …! - cinefeeds
Connect with us

TRENDING

சாட்டை படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்த… குணச்சித்திர நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம் …!

Published

on

பழம்பெரும் நடிகரான டி.எஸ். பாலையாவின் மகன் ஜூனியர் ரகுபாலையா ஆவார்.  இவர் தனது  தந்தையின் அடையாளத்தோடு சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார்.  இவரின் முதல் படமானது ‘மேல்நாட்டு மருமகள்’ ஆகும். இதனைத் தொடர்ந்து கோபுர வாசல், கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர், சாட்டை, புலி, நேர்கொண்ட பார்வை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஜூனியர் பாலையா கடைசியாக நடித்த படம் இரண்டு ஆண்களுக்கு முன்பாக வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படமாகும்.

இதை தவிர தற்பொழுது ‘முகிலன்’ என்ற வெப் சீரியலிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல சீரியல் ஆன சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரை என்று இரு திரைகளிலும் தனது நடிப்பாற்றலை வெளிபடுத்திய இவர் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

இவரின் இந்த இறப்பு திரை உலகை சேர்ந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனை அறிந்த ரசிகர்களும் தங்களது இரங்கல்களை பதிவிட்டு வருகின்றன. இவரின் திறமையை தமிழ் திரை உலகம் சரிவர பயன்படுத்தாத கோலிவுட் முழுவதும் தற்பொழுது சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement