TRENDING
கண்களில் நீர் ததும்ப …. சோகமாக புகைப்படத்தினை பதிவிட்ட சமந்தா… காரணம் என்ன…?
தமிழ் மாஸ்க்கோவின் காவேரி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. இதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இதனிடையே நாக சைத்தனியாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சமந்தா நடிக்க ஆரம்பித்த பொழுதே அவரது சருமங்களில் அலர்ஜி ஏற்பட்டு இருந்தது . பின்னர் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றிருந்தது. இதனை அடுத்து சமந்தா தனது உடல்நிலையை மனதில் வைத்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
எப்பொழுதும் சோசியல் மீடியாவில் அதிகமாக ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் சமந்தா தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கண்களில் நீர் ததும்ப இருக்கும் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதில் மேலும் ‘If you stumble, make it part of the dance’ என குறிப்பிட்டிருந்தார் . அதாவது நீங்கள் தடுமாறினாலும் அதனை உங்கள் நடனத்தின் ஸ்டேப் ஆக மாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.