தமிழ் படங்களுக்கு Bye Bye.. நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு..? ஓ ரூட் அந்த பக்கம் போகுதா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் படங்களுக்கு Bye Bye.. நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு..? ஓ ரூட் அந்த பக்கம் போகுதா..!!

Published

on

பிரபல நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி தெறி, தங்க மகன், 24 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனையடுத்து சமந்தா நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Advertisement

ஆனால் எதிர்பாராதவிதமாக மயோசிடிஸ் என்ற நோயால் சமந்தா பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். தற்போது ஒர்க் அவுட், உணவுப் பழக்கம் என அனைத்தையும் சீராக வைத்து நோயிலிருந்து மீண்டு வந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா ஹைதராபாத்தில் வீடு வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சமந்தா மும்பையில் செட்டிலாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக சமந்தா இந்த முடிவை எடுத்துள்ளாராம். மேலும் சமந்தா ஹிந்தி படங்களை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement