LATEST NEWS
பிரபல இயக்குனரோடு கைகோர்க்கும் கார்த்தி.. படம் எந்த மாதிரி இருக்கும் தெரியுமா..? வெளியான புது அப்டேட்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. அந்த படம் போதிய அளவு வரவேற்பை வரவில்லை. தற்போது 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.
மேலும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அடுத்ததாக தீரன் அதிகாரம் 2, கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்கள் கார்த்தியின் லைன் அப்பில் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் தமிழ். அவரது இயக்கத்தில் ஏற்கனவே டாணாகாரன் படம் வெளியானது. தற்போது தமிழ் இயக்கத்தில் கார்த்தி ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படம் 1960-களில் நடைபெறும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாக உள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.